சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த மினிலாரி

பந்தலூர் அருகே சாலையோர பள்ளத்தில் மினிலாரி கவிழ்ந்தது.

Update: 2021-05-26 16:56 GMT
பந்தலூர்,

பந்தலூர் அருகே தேவாலா வாளவயல் பகுதியை சேர்ந்தவர் சக்தி. இவர் நேற்று தேயிலை நிரப்பும் சாக்குபைகளை மினிலாரியில் ஏற்றுக்கொண்டு அட்டி பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். 

அட்டி பகுதியில் வந்த போது திடீரென மினிலாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது .இதில் அதிர்ஷ்டவசமாக சக்தி காயமின்றி உயிர் தப்பினார். 

பின்னர் அக்கம் பக்கத்தினர் சேர்ந்து மினிலாரியை கயிறு கட்டி மீட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்