தூத்துக்குடியில் மது விற்ற 6 பேர் கைது
தூத்துக்குடியில் மது விற்ற 6பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு உள்ளன. இந்த நிலையில் சட்டவிரோதமாக அனுமதியின்றி யாரேனும் மது விற்பனை செய்கிறார்களா? என்று போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அனுமதியின்றி மது விற்பனை செய்ததாக மாவட்டம் முழுவதும் 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 27 மதுபாட்டில்கள், 27 லிட்டர் கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.