1,877 பேருக்கு கொரோனா தடுப்பூசி
18 முதல் 44 வயதுக்கு உட்பட்ட 1,877 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
தேனி:
தேனி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி 13 மையங்களில் நடந்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று வரை மொத்தம் 75 ஆயிரத்து 736 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
அதில் 56 ஆயிரத்து 848 பேர், முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். 18 ஆயிரத்து 888 பேர் இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொண்டனர். நேற்று முன்தினம் முதல் மாவட்டத்தில் 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது.
நேற்று முன்தினம் 44 வயதுக்குட்பட்ட 983 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. நேற்று மொத்தம் 1,374 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். அவர்களில் 894 பேர் 18 முதல் 44 வயதுக்குட்பட்டவர்கள். கடந்த 2 நாட்களில் இந்த வயதுக்குட்பட்ட 1,877 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.