செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே தளவாய்- செங்கமேடு கிராமத்தில் அம்மன் கோவில் அருகில் தாமரைக்குளம் உள்ளது. இந்த பகுதியில் நேற்று முன்தினம் இரவு புள்ளிமான் ஒன்று இறை தேடி வந்தது. அப்போது ஊரில் உள்ள தெரு நாய்கள், மானை துரத்தியதால் குளத்தில் குதித்து தப்பிக்க முயன்றது. ஆனால் குளத்தில் தாமரை கொடிகள் அதிகளவில் படர்ந்து இருந்தால் அதில் சிக்கிய புள்ளிமான் தண்ணீரில் மூழ்கி செத்தது. இதனைக் கண்ட கிராம மக்கள், வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வன அலுவலர் மற்றும் கால்நடை மருத்துவர் ஆகியோர் பரிசோதனை செய்து, புள்ளியமானின் உடலை குழுமூர் காப்புக்காட்டிற்கு கொண்டு சென்று புதைத்தனர்.