ஊரடங்கு விதிகளை மீறியதாக 52 வாகனங்கள் பறிமுதல்
நெல்லை மாவட்டத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாக 52 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் நேற்று ஊரடங்கு விதிகளை மீறி வாகனத்தில் சுற்றி திரிந்தவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, 52 வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் பொது இடங்களில் முககவசம் அணியாத 320 பேருக்கும், சமூக இடைவெளியை பின்பற்றாத 9 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.
நெல்லை மாநகர் பகுதியில் ஊரடங்கை மீறி சுற்றித்திரிந்த 15 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.