தினமும் 25 ரெயில்வே ஊழியர்கள் கொரோனாவால் பாதிப்பு- திருச்சி கோட்ட மேலாளர் பேட்டி
தினமும் 25 ரெயில்வே ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவதாக திருச்சி கோட்ட மேலாளர் கூறினார்.
பொன்மலைப்பட்டி, மே.26-
திருச்சி ரெயில்வே கோட்டமேலாளர் அஜய்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-200 படுக்கை வசதிகளைக்கொண்ட ரெயில்வே மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. திருச்சி ரெயில்வேயில் தினசரி 20 முதல் 25 ரெயில்வே ஊழியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதே அளவு ஊழியர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்படுகின்றனர். தற்போது 60 கொரோனா நோயாளிகள் ரெயில்வே மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். இதுவரை 1400 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.கொரோனாவை கட்டுப்படுத்த தேசிய அளவில் போராடிவரும் நிலையில், ரெயில்வே ஊழியர்களிடம் சமூக இடைவெளி, முககவசம் அணியவும், கைகளை கழுவவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசியும் போடப்பட்டுவருகிறது, தற்போதுவரை 500 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.முன்னதாக திருச்சி பொன்மலை ரெயில்வே மருத்துவமனைக்கு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் ரூ.2¼ லட்சம் மதிப்பில் 3 ஆக்சிஜன் செறிவூட்டிகள் நேற்று அரியலூர் ராம்கோ சிமெண்டு நிறுவனத்தின் சமூக பங்களிப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டன.