மணப்பாறை அருகே கொரோனா அச்சத்தால் கழுத்தை அறுத்து டிரைவா் தற்கொலை

மணப்பாறை அருகே கொரோனா தொற்று அச்சத்தால் டிரைவர் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2021-05-25 18:57 GMT
வையம்பட்டி,
மணப்பாறை அருகே கொரோனா தொற்று அச்சத்தால் டிரைவர் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா அச்சம்

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த அனுக்கானத்தம் பகுதியைச் சேர்ந்தவர் பிச்சைமணி (வயது 49). இவர் சேலத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். கொரோனா முடக்கத்தால் நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அனுக்கானத்தத்திற்கு வந்துள்ளார்.

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். அப்போது அவருக்கு சுவாச பிரச்சினையும் இருந்துள்ளது. இதனால் தனக்கு கொரோனா தொற்று இருக்குமோ? என்ற அச்சம் பிச்சை மணிக்கு ஏற்பட்டதாக தெரிகிறது.

கழுத்தறுத்து தற்கொலை

இந்தநிலையில் நேற்று நள்ளிரவு வீட்டில் இருந்த பிச்சைமணி நேற்று காலை அருகில் உள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான தோட்டத்தில் ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மக்கள் இதுபற்றி வையம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் வையம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது பிச்சைமணி கை, கழுத்தை அறுத்ததால் ரத்தம் வெளியேறி இறந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வையம்பட்டி ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்