திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு 30 ஆக்சிஜன் சிலிண்டர்கள் இந்திய மருத்துவ கழகம் சார்பில் வழங்கப்பட்டது

திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு 30 ஆக்சிஜன் சிலிண்டர்கள் இந்திய மருத்துவ கழகம் சார்பில் வழங்கப்பட்டது.

Update: 2021-05-25 17:52 GMT
திருத்துறைப்பூண்டி,

இந்தியா முழுவதும் கொேரானா தொற்றால் ஏராளமானோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் வேதாரண்யம் அருகே உள்ள கரியாப்பட்டினம், வாய்மேடு, தில்லைவிளாகம், துளசியாப்பட்டினம் முத்துப்பேட்டை, ஜாம்புவானோடை, கோவிலூர், நாச்சிகுளம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது 90-க்கும் மேற்பட்ட கொரானா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் அளவு போதிய அளவு

ஆக்சிஜன் இல்லை என தலைமை மருத்துவர் சிவக்குமார் இந்திய மருத்துவர் சங்கத்திடம் தெரிவித்தார். இதன்பேரில் இந்திய மருத்துவ சங்க மூத்த தலைவர் குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் ராஜா, மற்றும் திருத்துறைப்பூண்டி கிளை தலைவர் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் தனியார் மருத்துவமனையில் உள்ள 30-க்கும் மேற்பட்ட ஆக்சிஜன் சிலிண்டர்களை தயார் செய்து அரசு மருத்துவனைக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாரிமுத்து எம்.எல்.ஏ. ஆக்சிஜன் சிலிண்டர்களை தலைமை மருத்துவரிடம் வழங்கினார். நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய தலைவர் பாஸ்கர், முன்னாள் நகர்மன்ற தலைவர் ஆர்.எஸ். பாண்டியன், விவசாய சங்க நகர செயலாளர் டி.பி. சுந்தர், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நகரச் செயலாளர் முருகேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்