ஒரே நாளில் 3632 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
ஒரே நாளில் 3632 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கோவை
கோவையில் நேற்று ஒரே நாளில் 3,632 பேருக்கு கொரோனா உறுதியானது. 24 பேர் பலியானார்கள்.
3,632 கொரோனா
கோவை மாவட்டத்தில் கொரோனா முதல் அலையை காட்டிலும் 2-வது அலை மின்னல் வேகத்தில் பரவி வருகிறது.
அதை கட்டுப்படுத் துவதில் கொரோனா தடுப்பூசி முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் இதுவரை இல்லாத உச்சமாக 4,277 பேருக்கு தொற்று உறுதியானது.
நேற்று அது சற்று குறைந்து 3,632 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 46 ஆயிரத்து 805- ஆக அதிகரித்தது.
24 பேர் பலி
மேலும் கோவை அரசு ஆஸ்பத்திரி, இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி, தனியார் மருத்துவமனைகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 2,689 பேர் நேற்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.
இதன் மூலம் இதுவரை குணமடைந்தவர்க ளின் எண்ணிக்கை 1 லட்சத்து 11 ஆயிரத்து 480-ஐ தொட்டது.
தற்போது 34 ஆயிரத்து 253 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று ஒரே நாளில் கோவை அரசு ஆஸ்பத்திரி, இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 24 பேர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதன் மூலம் கோவை மாவட்டத்தில் இதுவரை 1,072 பேர் கொரோனாவின் கோர பசிக்கு பலியாகி உள்ளனர்.