தட்டுப்பாடின்றி ஆவின் பால் வினியோகம் செய்ய நடவடிக்கை
தட்டுப்பாடின்றி ஆவின் பால் வினியோகம் செய்ய நடவடிக்கை
கோவை
கோவை மாவட்டத்தில் தட்டுப்பாடின்றி ஆவின் பால் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் கூறினார்.
அமைச்சர் ஆய்வு
கோவையில் ஆவின் பால் வினியோகம் குறித்து பல்வேறு இடங்களில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆய்வு மேற்கொண் டார்.
அப்போது மாவட்ட கலெக்டர், எஸ்.நாகராஜன் பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத்துறை ஆணையர் ஆர்.நந்தகோ பால், கோவை ஆவின் பொது மேலாளர் ஆர்.ரவிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் சா.மு.நாசர் நிருபர்களிடம் கூறியதாவது
பால் விலை குறைப்பு
தமிழக முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற உடன் தனது முதல் 5 கையெழுத்தில் ஒன்றாக ஆவின் பால்விலையை லிட்டருக்கு ரூ.3 குறைத்து உத்தரவிட்டார். அதன்படி ஆவின் பால் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 குறைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆவின் பால் அட்டை விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் பால் அட்டை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு அரசு அறிவித்த விலை குறைப்பு போக மேலும் சிறப்பு சலுகையாக அதிகபட்ச சில்லறை விற்பனை விலையில் இருந்து நீல நிற பால்பாக்கெட் லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 வரையிலும், ஆரஞ்சு மற்றும் பச்சை நிற பாக்கெட்டுகளுக்கு ரூ.2 வரையிலும் அதிரடி விலைகுறைப்பு செய்து விற்பனை செய்யப்படுகிறது.
இணையதளம் வழியாக அட்டை
கோவை மாவட்டத்தில் தற்போது 15 ஆயிரம் பால் நுகர்வோர்கள் அட்டைதாரர்களாக பதிவு செய்துள்ளனர். கொரோனா பரவல் காலத்திலும் பால் நுகர்வோர்கள் பால் அட்டையை தடையின்றி பெற நேரில் வருவதை தவிர்க்கும் வகையில் இணையதளம் வாயிலாக பால் அட்டை பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதுபோலவே சிறப்பு நிகழ்வுகளின் போது மொத்தமாக கேன்களில் பால் வாங்கும் முகவர்களுக்கு 1000 லிட்டர் வரையில் லிட்டர் ஒன்றுக்கு ரூ.2-ம், 1000 லிட்டருக்கு மேல் வாங்கும் வாடிக்கையாளர்க ளுக்கு ரூ.2.50-ம் விலை குறைப்பு செய்யப்படுகிறது. மேலும் அவர்கள் குறிப்பிடும் இடத்திற்கு டோர் டெலிவரி செய்யப்படுகின்றது.
1 லட்சத்து 65 ஆயிரம் லிட்டர்
தற்போதைய தளர்வுகளற்ற ஊரடங்கு காலத்திலும் பல்வேறு நிலை யில் கள அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
கோவை மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட்களில் ஒன்றான பால் பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கவும், பால் உற்பத்தியாளர்களி டம் போதிய அளவில் பால் கொள்முதல் செய்யவும் சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
கோவை மாவட்டத்தை பொருத்தவரை சிறுவாணி மெயின்ரோடு பச்சாபாளையத்தில் செயல்பட்டு வரும் கோவை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் லிமிடெட் நிறுவனத்தின் மூலம் கோவை மாவட்டத்தில் உள்ள 349 பால் கூட்டுறவு பால் உற்பத்தியா ளர்கள் சங்கங்களில் இருந்து நாளொன்றுக்கு சுமார் 1.78 லட்சம் லிட்டர் தரமான பால் கொள்முதல் செய்யப்படுகிறது.
அதை தரம்பிரித்து 250 மில்லி, 500 மில்லி, மற்றும் 1000 மில்லி ஆகிய அளவு பாக்கெட்டுகளில் அடைத்து 707 பால் விற்பனை முகவர்கள் மூலமாக தினசரி 1.65 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கண்காணிப்பு அதிகாரிகள்
இதை கண்காணிக்கவும் முறைப்படுத்தவும் மண்டல வாரியாக கண்கா ணிப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
அதன் தொடர் நிகழ்வாக புலியகுளம், பாப்பநாயக்கன்பாளையம், காந்திபுரம், வடகோவை, ஆர்.எஸ்.புரம், மற்றும் பொன்னையராஜபுரம். தெலுங்கு பாளையம், ஆகிய நுகர்வோர் மையங்களிலும், ஆர்.எஸ்.புரம் தடாகம் சாலை பால்பண்ணையிலும், பச்சாபளையம் தலைமை அலுவலகத்தி லும் அலுவலர்களுடனான கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கொரோனா வைரஸ் தொற்றின் தொடர்சங்கிலியை அறுக்கும் வகை யில் தமிழக முதல்- அமைச்சரால் அறிவிக்கப்பட்ட இந்த தளர்வுகளற்ற ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் பால்வாங்க வரும்போது முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.