கொரோனா தொடர்பான தகவல்களை பெற அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் தகவல் மையம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு தொடர்பான தகவல்களை பொதுமக்கள் பெறுவதற்கு வசதியாக அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் கொரோனா தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் கிரண்குராலா தெரிவித்துள்ளார்.

Update: 2021-05-25 17:12 GMT
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் கிரண்குராலா  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

9 ஒன்றியங்களில்

தமிழக அரசு வழிகாட்டுதல்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி பொதுமக்களுக்கு உதவிடும் வகையில் மாவட்டத்துக்குட்பட்ட ஊரக உள்ளாட்சி பகுதிகளில் வசித்துவரும் பொதுமக்கள் கொரோனா தடுப்பு தொடர்பான தகவல்களை பெறுவதற்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் மற்றும் 9 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் கொரோனா தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

தொலைபேசி எண்கள்

அதன்படி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தின் 04151-290616 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும் திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியம்-04153-252650, திருநாவலூர் ஊராட்சி ஒன்றியம் -04149-224221, உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றியம்-04149-222238, கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம்-04151-222371, சின்னசேலம் ஊராட்சி ஒன்றியம்-04151-236235, ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியம்-04151-239223, சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியம்-04151-235223, தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியம்-04151-233212, கல்வராயன்மலை ஊராட்சி ஒன்றியம்-04151-242228 ஆகிய 9 ஊராட்சி ஒன்றியங்களில் குறிப்பிட்ட செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு கொரோனா நோய் தடுப்பு மற்றும் மருத்துவ உதவிகள் தொடர்பான தகவல்களை பொதுமக்கள் பெறலாம். 
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்