நீலகிரியில் 475 பேருக்கு கொரோனா
நீலகிரியில் 475 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 15 ஆயிரத்து 651 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் புதிய உச்சமாக 475 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகி உள்ளது.
இதனால் நீலகிரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்து 126 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் 371 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை 13 ஆயிரத்து 48 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 73 பேர் இறந்துள்ளனர்.
தற்போது 3,005 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நீலகிரியில் ஆக்சிஜன் உதவியுடன் கூடிய 335 படுக்கைகளில் 327 படுக்கைகள் நிரம்பி உள்ளது. தற்போது 8 படுக்கைகள் மட்டுமே காலியாக உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.