கொரோனாவுக்கு போலீஸ்காரர் பலி

கொரோனாவுக்கு போலீஸ்காரர் பலியானார்.

Update: 2021-05-25 17:02 GMT
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் ஏ.பள்ளிப்பட்டி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தவர் விஜயகுமார் (வயது 31). இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இவர் கொரோனா பரவல் தடுப்பு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருக்கு சளி, காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து பரிசோதித்தபோது கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதனால் இவர் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு விஜயகுமார் உயிரிழந்தார்.

மேலும் செய்திகள்