ஒரே நாளில் 16 பேரின் உயிரை பறித்த கொரோனா

திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 16 பேரின் உயிரை கொரோனா பறித்தது.

Update: 2021-05-25 15:16 GMT
திண்டுக்கல்: 

16 பேர் பலி
தமிழகத்தில் கொரோனாவின் 2-வது அலையால் பாதிப்பும், இறப்பும் அதிகமாக உள்ளது. 

அதிலும் முதல் அலையுடன் ஒப்பிட்டால், 2-வது அலையில் இறப்பு மிகவும் அதிகம் ஆகும். 

அதன்படி திண்டுக்கல் மாவட்டத்திலும் கொரோனாவால் தினமும் பலர் இறக்கின்றனர். 

நேற்று முன்தினம் வரை 325 பேர் கொரோனாவுக்கு இறந்தனர்.

இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் பெண் உள்பட மேலும் 16 பேரின் உயிரை கொரோனா பறித்தது. 

இதில் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் 11 பேரும், தேனி அரசு மருத்துவமனையில் 2 பேரும், மதுரை அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை மற்றும் திண்டுக்கல்லில் ஒரு தனியார் மருத்துவமனை ஆகியவற்றில் தலா ஒருவரும் இறந்துள்ளனர்.

மேலும் இறந்தவர்களில் 40 வயது முதல் 50 வயதுக்குள் 4 பேரும், 50 வயதுக்கு மேல் 60 வயதுக்குள் 2 பேரும், 60 வயதுக்கு மேல் 10 பேரும் உள்ளனர். 

கடந்த ஓராண்டில் கொரோனாவால் ஏற்பட்ட தினசரி இறப்பு எண்ணிக்கையில் இதுவே அதிகபட்சமாகும். 

இதன்மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 341 ஆக உயர்ந்தது.

541 பேருக்கு தொற்று 
இதற்கிடையே நேற்று இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 541 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. 

இதுவும் கடந்த ஓராண்டில் ஏற்பட்ட அதிகபட்ச ஒருநாள் பாதிப்பு ஆகும். இதன்மூலம் மாவட்டத்தின் மொத்த கொரோனா பாதிப்பு 24 ஆயிரத்து 734 ஆக உயர்ந்தது.

அதேநேரம் 366 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.

 அந்த வகையில் இதுவரை 21 ஆயிரத்து 75 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்றைய நிலவரப்படி 3 ஆயிரத்து 318 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மேலும் செய்திகள்