கொடைரோடு அருகே போலீஸ் சோதனை சாவடியில் டி.ஐ.ஜி. ஆய்வு

கொடைரோடு அருகே போலீஸ் சோதனை சாவடியில் திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி ஆய்வு செய்தார்.

Update: 2021-05-25 15:06 GMT
திண்டுக்கல்: 

மதுரை-திண்டுக்கல் 4 வழிச்சாலையில் பள்ளப்பட்டி பிரிவு அருகே சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. 

அந்த வழியாக செல்லும் வாகனங்களை போலீசார் சோதனை செய்து வருகின்றனர். 

இந்த நிலையில் நேற்று திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி ஆய்வு செய்தார். 

அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி இ-பதிவு உள்ளதா? என்பது குறித்து சோதனை செய்தார். 

முன்னதாக நிலக்கோட்டை தாலுகா விளாம்பட்டி போலீஸ் நிலையத்தில் அவர் ஆய்வு மேற்கொண்டார். 

அங்கு போலீஸ் குடியிருப்பில் வசிக்கும் போலீசார் குடும்பத்தினருக்கு முக கவசம், கிருமி நாசினி ஆகியவற்றை டி.ஐ.ஜி. வழங்கினார். 

மேலும் செய்திகள்