சேலத்தில் பாறை வெட்டி எடுக்கும் போது வெடி விபத்தில் தொழிலாளி பலி

வெடி விபத்தில் தொழிலாளி பலி

Update: 2021-05-24 22:34 GMT
சேலம்:
சேலத்தில் பாறை வெட்டி எடுக்கும் போது வெடி விபத்தில் தொழிலாளி பலியானார்.
தொழிலாளி
பனமரத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர் அர்ஜூனன் (வயது 42). இவர், நேற்று மாலை சன்னியாசிகுண்டு அருகே ஒரு கல்குவாரிக்கு மேல் பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் குமரகிரி கோவிலுக்காக பாறை வெட்டி எடுக்கும் பணிக்கு சென்றார். அப்போது அவர்  ராசிபுரம் அருகே அத்தனூர் ஆயிபாளையம் பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் சுரேஷ் (39), குமார் (34) ஆகிய 2 தொழிலாளிகளையும் அழைத்து சென்றுள்ளார். தொடர்ந்து 3 பேரும் அங்கு பாறையை வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது பாறையை வெட்டி எடுப்பதற்காக ஏற்கனவே குழியில் வைத்திருந்த வெடி திடீரென வெடித்து சிதறியது. இந்த வெடி விபத்தில் அருகில் நின்றுகொண்டிருந்த சுரேஷ் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 
விசாரணை
மேலும் குமார் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அங்கு வந்த மற்ற தொழிலாளர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த கிச்சிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் இறந்த சுரேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குமரகிரி கோவிலுக்கு அரசு புறம்போக்கு நிலத்தில் பாறைைய வெட்டி எடுக்கும் பணி நடந்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளி உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்