திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு புதியதாக நியமிக்கப்பட்ட டீன் நேற்று பொறுப்பேற்றார். கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.

திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு புதியதாக நியமிக்கப்பட்ட டீன் நேற்று பொறுப்பேற்றார். கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.

Update: 2021-05-24 19:43 GMT
திருப்பூர், 
திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு புதியதாக நியமிக்கப்பட்ட டீன் நேற்று பொறுப்பேற்றார். கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.
டீன்கள் இடமாற்றம்
திருப்பூர் தாராபுரம் ரோட்டில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த அரசு மருத்துவமனைக்கு சுற்றுப்பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் வந்து உள்நோயாளியாகவும், புறநோயாளியாகவும் சிகிச்சை பெற்று செல்கிறார்கள். 
இந்நிலையில் மருத்துவமனை பணிகளையும், கல்லூரியின் நிர்வாக பணிகளையும் மேற்கொள்ள டீன் இருந்து வருகிறார்கள். திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீனாக கடந்த ஒரு ஆண்டிற்கும் மேலாக வள்ளிசத்தியமூர்த்தி பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் கடந்த வாரம் 17-ந் தேதி தமிழகத்தில் 7 அரசு மருத்துவக்கல்லூரி டீன்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதில் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய வள்ளி சத்தியமூர்த்தி, சேலம் அரசு மோகன்குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி டீனாகவும், சேலம் அரசு மோகன்குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி டீனாக இருந்த முருகேசன், திருப்பூருக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
பொறுப்பேற்பு
இந்த உத்தரவின்படி வள்ளிசத்தியமூர்த்தி கடந்த 18-ந் தேதி சேலத்தில் பணியில் சேர்ந்தார். அதுபோல்  திருப்பூருக்கு இடமாற்றம் செய்யப்பட்ட டீன் முருகேசன் அங்குள்ள பணிகளை ஒப்படைத்துவிட்டு நேற்று இங்கு வந்து பொறுப்பேற்றுக்கொண்டார். அவரை திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி டாக்டர்கள், நர்சுகள் வரவேற்றனர்.
இது குறித்து டீன் முருகேசன் கூறியதாவது:-
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் பணிகள் ஏற்கனவே வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் அரசு வழிகாட்டுதல்களுடன் தொடர்ந்து நடைபெறும். பொதுமக்கள் கொரோனா குறித்து அச்சமடைய தேவையில்லை.
அனைவருக்கும் தரமான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும். கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கூறினார்.

மேலும் செய்திகள்