பொதுமக்களுக்கு தட்டுப்பாடு இன்றி பால் கிடைக்க நடவடிக்கை அமைச்சர் நாசர் தகவல்
ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு தட்டுப்பாடு இன்றி பால் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் நாசர் தெரிவித்தார்.
தாம்பரம்,
கொரோனா பரவல் காரணமாக நேற்று முதல் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு தட்டுப்பாடு இன்றி பால், தயிர் உள்ளிட்ட பால் பொருட்கள் அவர்களது வீட்டின் அருகேயே கிடைக்கும் விதமாக ஆவின் நிர்வாகம் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
சென்னையை அடுத்த தாம்பரம் சுற்றுவட்டாரத்தில் இந்த பணிகளை பால்வளத்துறை அமைச்சர் நாசர் நேரில் ஆய்வு செய்தார். கிழக்கு தாம்பரம் காந்தி பூங்கா அருகில் உள்ள ஆவின் பாலகத்தில் பொதுமக்களுக்கு பால் பாக்கெட்டுகளை வழங்கி குறைகளை கேட்டறிந்தார்.
அதேபோல் மேற்கு தாம்பரம் பஸ் நிலையம் பகுதியில் நடமாடும் பால் விற்பனை வாகனங்களையும் அமைச்சர் ஆய்வு செய்தார்.
பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் நாசர் கூறியதாவது:-
தட்டுப்பாடு இன்றி கிடைக்கும்
தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு நேரத்தில் தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களுக்கு தட்டுப்பாடு இன்றி பால் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தமிழகம் முழுவதும் நடைமுறையில் உள்ள நடமாடும் பால் பொருட்கள் விற்பனை வாகனங்கள் இந்த ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் பயன்பெறும் விதமாக தெரு தெருவாக விற்பனை செய்யும். இதனால் ஆவின் பால்பொருட்கள் மக்களுக்கு தங்கு தடையின்றி கிடைத்திடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது தாம்பரம் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா மற்றும் பால்வளத்துறை அதிகாரிகள் உடன் வந்தனர்.
நடமாடும் காய்கறி வாகனங்கள்
அதேபோல் ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு வாகனங்கள் மூலமாக காய்கறிகள், பழங்களை நேரடியாக விற்பனை செய்யவும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது.
அதன்படி ஆவடி, திருநின்றவூர் ஆகிய பகுதிகளில் நடமாடும் காய்கறி வாகனங்களை அமைச்சர் நாசர், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதில் ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மேலும் திருவேற்காடு நகராட்சியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் முன் களப்பணியாளர்களுக்கான பயிற்சி முகாம் மற்றும் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் நாசர், அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் 50 நடமாடும் காய்கறி வாகனங்களையும் தொடங்கி வைத்தார்.
முகப்பேர்
மேலும் முகப்பேர் டி.ஏ.வி. பள்ளி அருகிலுள்ள அதிநவீன ஆவின் பாலகத்தை அமைச்சர் சா.மு.நாசர் மற்றும் ஆவின் மேலாண்மை இயக்குனர் இரா.நந்தகோபால் ஆகியோர் ஆய்வு செய்து துப்புரவு பணியாளர்களுக்கு ஆவின் பாலினை விற்பனை செய்தனர். அப்போது அம்பத்தூர் எம்.எல்.ஏ. ஜோசப் சாமுவேல் மற்றும் ஆவின் நிறுவன அதிகாரிகள் உடனிருந்தனர்.
பொது மக்களுக்கு பால் வினியோகம் தங்கு தடையின்றி நடைபெறுவதை கண்காணிக்க 24 மணி நேர வாடிக்கையாளர் சேவை மையம் மற்றும் பகுதி வாரியாக சிறப்பு குழுக்களை அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்:044-23464575, 23464576, 23464578 மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 3300 தொடர்பு கொள்ளலாம் என ஆவின் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.