ஒரே நாளில் கொரோனாவுக்கு 6 பேர் பலி

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக ஒரே நாளில் 6 பேர் இறந்தனர். மேலும் 215 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-05-24 19:16 GMT
சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக ஒரே நாளில் 6 பேர் இறந்தனர். மேலும் 215 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

215 பேருக்கு தொற்று

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று தினசரி அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 215 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதில் சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற கொரோனா பரிசோதனை செய்தவர்களில் 140 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மற்றவர்கள் தனியார் பரிசோதனை நிலையங்களில் பரிசோதனை செய்தவர்கள்.

6 பேர் பலி

இதே போல் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 6 பேர் இறந்தனர். இதில் சிவகங்கையை சேர்ந்த 87 வயதுள்ள முதியவர் ஒருவரும், 46 வயதுள்ள பெண் ஒருவரும், புதுக்கோட்டையை சேர்ந்த 64 வயதுள்ள மூதாட்டி ஒருவரும், சிவகங்கையை சேர்ந்த 70 வயதுள்ள முதியவர் ஒருவரும், கொரோனா தொற்று காரணமாக சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இறந்தனர்.
.இது போல ்சிவகங்கையை சேர்ந்த 61 வயதுள்ள பெண் மதுரையில் உள்ள அரசு மருத்துவமனையிலும், சிவகங்கையை சேர்ந்த 77 வயதுள்ள முதியவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் இறந்தனர்.

85 பேர் குணமடைந்தனர்

மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை மற்றும் வீட்டு தனிமையில் உள்ளவர்கள் உள்பட 1,721 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். நேற்று ஒரே நாளில் 85 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.

மேலும் செய்திகள்