சென்னை மாநகராட்சி பகுதிகளில் அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி
சென்னை மாநகராட்சி பகுதிகளில் அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி.
சென்னை,
சென்னை பெருநகர மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
கொரோனா தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக தற்போது 18 வயது முதல் 45 வயது வரையுள்ள நபர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதித்துள்ளது. முதற்கட்டமாக அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ளும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் சென்னை மாநகராட்சியின் சார்பில் இதற்காக அமைக்கப்படவுள்ள தடுப்பூசி சிறப்பு முகாம்களில் கொரோனா தடுப்பூசி விலையில்லாமல் செலுத்தப்பட உள்ளது.
அதன்படி நாள்தோறும் செய்தித்தாள்கள் வினியோகம் செய்பவர்கள், பால் வினியோகிப்பவர்கள், தெருவோர வியாபாரிகள், மருந்தகங்கள் மற்றும் மளிகை கடைகளின் பணியாளர்கள், ஆட்டோ, கார், பஸ் டிரைவர்கள், கட்டிட தொழிலாளர்கள் ஆகியோரும் தடுப்பூசி சிறப்பு முகாம்களில் தடுப்பூசிகளை பெற்று பயனடையலாம்.
மண்டல அலுவலகம் அல்லது மாநகராட்சி இணையதள இணைப்பின் வாயிலாக அல்லது 94983 46494 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தங்களுடைய விவரங்களை பதிவு செய்தால், மாநகராட்சியின் சார்பில் தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாம் ஏற்படுத்தப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.