479 பேருக்கு கொரோனா பரிசோதனை
ஆலங்குளம் பகுதியில் 479 ேபருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
ஆலங்குளம்,
ஆலங்குளம், சங்கரமூர்த்திபட்டி, டி.கரிசல்குளம், ராசாப் பட்டி, சீவலப்பேரி, கண்மாய்பட்டி, சுண்டங்குளம், ஏ.லட்சுமிபுரம், கீழாண்மறைநாடு, கொங்கன்குளம், அம்பேத்கர்நகர் ஆகிய கிராமங்களில் 479 நபர்களுக்கு வட்டார மருத்துவர் செந்தட்டிகாளை தலைமையிலான குழுவினர் கொரோனா பரிசோதனை செய்தனர். ஆலங்குளம் டி.என்.சி.முக்கு ரோடு, மாவட்ட மத்தியகூட்டுறவு வங்கி கிளை ஆகிய இடங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது சுகாதார ஆய்வாளர் மதியரசு, ஆலங்குளம் ஊராட்சி தலைவர் காத்தம்மாள்பசுபதிராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.