மோட்டார் சைக்கிள்கள் மோதல்; 2 பேர் பலி
காரியாபட்டி அருகே மோட்டார்சைக்கிள்கள் மோதிய விபத்தில் 2 பேர் பலியாகி உள்ளனர்.
காரியாபட்டி,
விருதுநகர் மாவட்டம் முடியனூரை சேர்ந்தவர் முத்துச்செல்வம்(வயது 29). இவர் மல்லாங்கிணறில் உள்ள பெட்ரோல் பங்கில் தனது மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் நிரப்பி விட்டு வந்து கொண்டிருந்தார்.
அப்போது திருத்தங்கலை சேர்ந்த விஷ்ணு (32) என்பவர் புளியம்பட்டியில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விட்டு மீண்டும் திருத்தங்கலை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது 2 மோட்டார்சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இந்தவிபத்தில் முத்துச்செல்வம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த விஷ்ணுவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார். இதுகுறித்து மல்லாங்கிணறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.