வாகனத்தில் காய்கறி விற்பனையை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கிவைத்தார்

வெள்ளகோவிலில் வாகனத்தில் காய்கறி விற்பனையை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கிவைத்தார். ஊரடங்கு காரணமாக சாலைகள் வெறிச்சோடின.

Update: 2021-05-24 17:57 GMT
வெள்ளகோவில்
வெள்ளகோவிலில் வாகனத்தில் காய்கறி விற்பனையை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கிவைத்தார். ஊரடங்கு காரணமாக சாலைகள் வெறிச்சோடின.
முழுஊரடங்கு
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு நேற்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. 
இந்தநிலையில் பொதுமக்களின் நலன் கருதி வாகனம் மூலம் பொதுமக்களுக்கு காய்கறி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி அனைத்துபகுதிகளிலும் காய்கறிகள் விற்பனை தொடங்கப்பட்டது.
அமைச்சர் தொடங்கிவைத்தார்
அந்த வகையில் வெள்ளகோவில்‌ நகராட்சி சார்பில் காய்கறி விற்பனையை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று வெள்ளகோவில் நகராட்சி அலுவலகத்தில் தொடங்கி வைத்தார்.  பொதுமக்கள் தேவைக்காக வெள்ளகோவில் நகராட்சி சார்பில் 21 வார்டுகளுக்கு காய்கறி விற்பனையை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நகராட்சி அலுவலகத்தில் தொடங்கி வைத்தார். 21-வார்டு களுக்கும் 18 வாகனங்களில் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை காய்கறி,பழங்கள்,மளிகை பொருட்கள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
நேற்று காய்கறி விற்பனை நிலவரம்:-
தக்காளி ஒரு கிலோ ரூ.25, சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.50, பெரிய வெங்காயம் ஒரு கிலோ ரூ.30, முட்டைக்கோஸ் ஒரு கிலோ ரூ.30, முள்ளங்கி ஒரு கிலோ ரூ.40, வெண்டைக்காய் ஒரு கிலோ ரூ.40, கேரட் ஒரு கிலோ ரூ.50, பீட்ரூட் ஒரு கிலோ ரூ.50, கரிவேப்பிலை ஒரு கட்டு ரூ.5, புதினா ஒரு கட்டு ரூ.5 க்கு விற்பனை செய்யப்பட்டது. 
நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் டி.சசிகலா, நகராட்சி பொறியாளர் கே.மணி, நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்