150 படுக்கை வசதியுடன் கொரோனா சிகிச்சை மையம் திறப்பு

வால்பாறையில் 150 படுக்கை வசதியுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையம் திறக்கப்பட்டது.

Update: 2021-05-24 17:07 GMT
வால்பாறை

வால்பாறையில் 150 படுக்கை வசதியுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையம் திறக்கப்பட்டது. 

கொரோனா சிகிச்சை மையம் 

மலைப்பிரதேசமான வால்பாறையில் கொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை சிகிச்சைக்காக சமவெளி பகுதிக்கு கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டது.

எனவே வால்பாறையில் உள்ள அரசு கல்லூரி வளாகத்தில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். 

அதன்படி அங்குள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 150 படுக்கை வசதிகளுடன் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்தது. 

திறக்கப்பட்டது

இங்கு அடிப்படை வசதிகள் அனைத்தும் அமைக்கப்பட்டதுடன், 150 கட்டில்கள் மற்றும் மெத்தைகளும் போடப்பட்டன. அத்துடன் தேவைப்படுவோருக்கு கொடுக்கும் வகையில் ஆக்சிஜன் செறிவூட்டிகள் வசதியும் ஏற்பட்டது. 

இதையடுத்து இந்த மையம்  திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வருவாய்த்துறையினர், சுகாதாரத்துறையை சேர்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். 

இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

ஆரம்ப கட்ட சிகிச்சை

புதிதாக திறக்கப்பட்ட மையத்தில் கொரோனா அறிகுறிகள் உள்ள ஆரம்ப கட்ட சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும். 

தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் பொள்ளாச்சி மற்றும் கோவையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் 

இங்கு அனுமதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க டாக்டர்கள், நர்சுகள் உள்பட மருத்துவ குழுவினரும் நியமிக்கப்பட்டு உள்ளனர். நகராட்சி நிர்வாகம் சார்பில் தூய்மை பணியாளர்கள் இங்கு சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

மேலும் செய்திகள்