திருக்கோவிலூர் அருகே பெங்களூருவில் இருந்து கடத்தி வரப்பட்ட 432 மதுபாட்டில்கள் சிக்கியது

திருக்கோவிலூர் அருகே பெங்களூருவில் இருந்து கடத்தி வரப்பட்ட 432 மதுபாட்டில்கள் சிக்கியது

Update: 2021-05-24 17:05 GMT
திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன், பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், ஏட்டு கணேஷ் மற்றும் போலீசார் நேற்று அதிகாலை கொரக்கன்தாங்கல் கிராமத்தில் வாகன சோதனை மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள காப்பு காட்டுப்பகுதியில் இருந்து வந்த மினி லாரியை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். இதில் லாரியில் தக்காளி பெட்டிகளுக்கு இடையே மதுபாட்டில்கள் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர். மொத்தம் 9 பெட்டிகளில் 432 மதுபாட்டில்கள் இருந்தன.

இதையடுத்து மினிலாரியில் வந்தவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் வில்லிவலம் கிராமத்தை சேர்ந்த குப்பன் மகன் சத்தியராஜ்(வயது28), குமார் மகன் பாமேஷ்(32) என்பதும், பெங்களூருவில் இருந்து தக்காளிபெட்டிகளுக்கு இடையே மதுபாட்டில்களை மறைத்து வைத்து கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் மதுபாட்டில்களுடன் மினி லாரியையும் பறிமுதல்செய்தனர். இதன் மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும்.

மேலும் செய்திகள்