கொரோனா சிகிச்சை மையம் அமைக்க எதிர்ப்பு

கொரோனா சிகிச்சை மையம் அமைக்க எதிர்ப்பு

Update: 2021-05-24 16:08 GMT
பேரூர்
பேரூர் அருகே அரசு பள்ளியில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரியின் வாகனத்தை பொதுமக்கள் முற்றுகையிட்ட தால் பரபரப்பு ஏற்பட்டது.

கொரோனா சிகிச்சை மையம்

கோவையை அடுத்த தொண்டாமுத்தூர் ஒன்றியம் பேரூர் செட்டி பாளையம் ஊராட்சியில் பச்சாபாளையம் கிராமம் உள்ளது. இந்த ஊர் பிரிவில் இருந்து தெற்கே ஊருக்கு செல்லும் வழியில் குடியிருப் புக்கு அருகே அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. 

இங்கு, கிராம ஊராட்சி அளவிலான கொரோனா தொற்று சிகிச்சை மையம் அமைப்பது குறித்த பள்ளி நுழைவுவாசலில் அறிவிப்பு நோட்டீஸ் நேற்று ஒட்டப்பட்டது. இதை அறிந்த பொதுமக்கள் ஊராட்சி வார்டு உறுப்பினர் சசி, முன்னாள் வார்டு உறுப்பினர் அருண் மற்றும் சிலர் நேற்று மதியம் அந்த பள்ளிக்கூடம் முன்பு திரண்டனர். 

வாகனம் முற்றுகை

அப்போது அந்த வழியாக வட்டார வளர்ச்சி அலுவலர் சுந்தரி மற்றும் ஊராட்சி செயலர் செழியன் உள்ளிட்டோர் பள்ளிக்கூடம் முன்பு வாகனத்தில் வந்தனர். உடனே பொதுமக்கள் அதிகாரி வந்த வாகனத்தை முற்றுகையிட்டு, அரசு பள்ளியில் கொரோனா தொற்று சிகிச்சை மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் அவர்கள், ஊராட்சி பகுதியில் அதிக இடவசதி கொண்ட தனியார் பள்ளி, கல்லூரிகள் இருக்கும் போது நெருக்கடியான இடத்தில் கொரோனா சிகிச்சை மையம் அமைப்பது ஏன் என்று கேட்டு அதிகாரியிடம் வாக்குவாதம் செய்தனர். 

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் அங்கிருந்து வாகனத்தில் புறப்பட்டு சென்றனர். 

இது குறித்து ஊராட்சி தலைவர் என்.பி.சாந்திபிரசாத் கூறுகையில்,  மாவட்ட கலெக்டர் உத்தரவுப்படி, ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் கொரோனா தொற்று கண்காணிப்பு குழு மற்றும் சிகிச்சை மையம் ஏற்படுத்தப்பட உள்ளது என்றார்.

மேலும் செய்திகள்