நாசரேத் அருகே முதியவர் தூக்கு போட்டு தற்கொலை
நாசரேத் அருகே முதியவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்
நாசரேத்:
நாசரேத் அருகே உள்ள மேலவெள்ளமடம் சமாதானம் தெருவை சேர்ந்தவர் முத்துமாலை மகன் பெருமாள் (வயது 70). இவருக்கு ஆஸ்துமா வியாதி இருந்து வந்துள்ளது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர் வீடு அருகிலுள்ள வேப்பமரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நாசரேத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.