ஊரடங்கு பாதுகாப்பு பணிகளை தென் மண்டல போலீஸ் ஐ.ஜி. ஆய்வு
ஊரடங்கு பாதுகாப்பு பணிகளை தென் மண்டல போலீஸ் ஐ.ஜி. ஆய்வு செய்தார்.
தேனி:
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தளர்வில்லா ஊரடங்கு நேற்று அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து ஊரடங்கு விதியை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க தேனி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போலீசார் வாகன தணிக்கையிலும், முக்கிய இடங்களில் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டனர்.
இந்த பணிகளை ஆய்வு செய்ய தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. அன்பு நேற்று தேனிக்கு வந்தார். பின்னர் ஆண்டிப்பட்டி, க.விலக்கு பகுதிகளில் பாதுகாப்பு பணிகளை அவர் ஆய்வு செய்தார். தேனி அரண்மனைப்புதூர் விலக்கு, நேரு சிலை சிக்னல் பகுதிகளில் பாதுகாப்பு பணியையும், வாகன தணிக்கை செய்யும் பணியையும் ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து பெரியகுளம், தேவதானப்பட்டி பகுதிகளில் அவர் ஆய்வு செய்தார். ஆய்வின் போது, ஊரடங்கை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்றும், ஊரடங்கு விதிகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போலீசாருக்கு அவர் அறிவுரை வழங்கினார்.
இதுபோல, ஆண்டிப்பட்டி, க.விலக்கு, தேனி, பெரியகுளம் பகுதிகளில் ஊரடங்கு பாதுகாப்பு பணிகளை திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி நேற்று மாலையில் ஆய்வு செய்தார். அப்போது அவர் போலீசாருக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கினார். இந்த ஆய்வின்போது போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கரன் ஆகியோர் உடன் இருந்தனர்.