கோவைக்கு 2-வது தவணையாக ரெயில் மூலம் 19.54 டன் ஆக்சிஜன் வந்தது

ஒடிசாவில் இருந்து கோவைக்கு 2-வது தவணையாக ரெயில் மூலம் 19.54 டன் ஆக்சிஜன் வந்தது.

Update: 2021-05-24 00:51 GMT
கோவை

தமிழகத்தில் மருத்துவ ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் பல்வேறு மாநிலங்களில் இருந்து ரெயில்கள் மூலம் ஆக்சிஜன் பெறப்பட்டு வருகிறது. கடந்த 14 -ந்தேதி முதல் 898.61 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜன் தமிழகத்திற்கு ரெயில் மூலம் கொண்டு வரப்பட்டு உள்ளது. 

இந்நிலையில் கடந்த 20-ந் தேதி கோவைக்கு முதல் தவணையாக 29.24 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் ரெயில் மூலம் கொண்டு வரப்பட்டது. இந்தநிலையில் 2-ம் தவணையாக 2 டேங்கர் லாரிகளுடன், 19.54 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஒடிசாவில் இருந்து கோவைக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. 

மதுக்கரை ரெயில்நிலையத்தில் இருந்து ஆக்சிஜன் டேங்கர் லாரிகள் இறக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கணபதியில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

மேலும் செய்திகள்