கணவர் கொரோனாவால் இறந்ததால் மனைவி கிணற்றில் குதித்து தற்கொலை
கணவர் கொரோனாவால் இறந்ததால் மனம் உடைந்த மனைவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
கன்னங்குறிச்சி:
சேலம் கோரிமேட்டை அடுத்த சின்னகொல்லப்பட்டி பகுதியை சேர்ந்த கோவிந்தன் கடந்த வாரம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கோவையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இறந்தார். கணவர் இறந்தது முதல் இவரது மனைவி செவ்வந்தி (வயது 57) மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கன்னங்குறிச்சி போலீசார் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.