சேலம் வனவர் கொரோனாவுக்கு பலி

சேலம் வனவர் கொரோனாவுக்கு பலியானார்.

Update: 2021-05-23 22:13 GMT
சேலம்:
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள கே.ஆர்.தோப்பூர் பகுதியை சேர்ந்தவர் தேசிங் (வயது 55). இவர் சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் வனவராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்ந்தார்.
அங்கு பரிசோதித்தபோது அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி அவர் நேற்று பரிதாபமாக இறந்தார்.

மேலும் செய்திகள்