விதிமீறிய கடைகளுக்கு அபராதம்
விதிமீறிய கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது
சோழவந்தான்
மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் உத்தரவின் பேரில், வாடிப்பட்டி தாசில்தார் பழனிகுமார் ஆலோசனையின் பேரில் சோழவந்தான் பகுதி மார்க்கெட் ரோடு, மாரியம்மன் சன்னதி, 46 நம்பர் ரோடு, வடக்குரதவீதி, வட்டபிள்ளையார் கோவில் பகுதி, ெரயில்வே பீடர் ரோடு பகுதி ஆகிய பகுதிகளில் வருவாய் ஆய்வாளர் ராஜன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் மற்றும் போலீசார், கிராம உதவியாளர்கள் நல்லகருப்பன், சண்முகம் ஆகியோர் கொரோனா கட்டுப்பாடு விதிகள் மீறிய 3 மளிகை கடைகளுக்கு தலா ரூ.500 வீதம் அபராதம் விதித்தனர்.