ஏழைகளுக்கு கொரோனா நிவாரண பொருட்கள்
பணகுடியில் ஏழைகளுக்கு கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.
பணகுடி, மே:
பணகுடியில் போலீசார் சார்பில் கொரோனா பரவல் காரணமாக வாழ்வாதாரம் இழந்த ஏழைகளுக்கு 10 கிலோ அரிசி, மளிகை பொருட்களை பணகுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அலெக்ஸ்ராஜ் வழங்கினார். பயனாளிகள் சமூக இடைவெளியில் விட்டு பொருட்களை வாங்கி சென்றனர். மேலும் போலீசார் சார்பில் தொடர்ந்து கொேரானா நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.