ஓசூர் அருகே தகராறில் தம்பியை தாக்கிய காவலாளி கைது

ஓசூர் அருகே தகராறில் தம்பியை தாக்கிய காவலாளியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-05-23 20:16 GMT
ஓசூர்,

அசாம் மாநிலம் கச்சார் மாவட்டத்தை சேர்ந்தவர் பிதியாதர் கோலா. இவரது மனைவி நிர்யா கோ (வயது 40). இவர்களின் மகன்கள் சாஜன் (27), கைலாஷ் (25). இவர்கள் அனைவரும் ஓசூர் அருகே உளியாளம் பகுதியில் உள்ள ஒரு லே-அவுட்டில் தங்கி உள்ளனர். கைலாசும், சாஜனும் அந்த லேஅவுட்டில் காவலாளிகளாக வேலை செய்து வருகிறார்கள்.

இந்தநிலையில் சம்பவத்தன்று கைலாஷ், அண்ணன் சாஜனின் மோட்டார்சைக்கிளை அவரிடம் கேட்காமல் கடைக்கு எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் வீட்டிற்கு திரும்பிய கைலாசிடம் தகராறு செய்த சாஜன் இரும்பு கம்பியால் கைலாசை தாக்கினார். இதில் காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து நிர்யா கோ பாகலூர் போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சாஜனை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்