வேலூர் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு யாருக்கும் இல்லை
வேலூர் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு யாருக்கும் இல்லை
வேலூர்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் 2-வது அலையால் தினமும் ஏராளமான நபர்கள் பாதிக்கப்படுகிறார்கள். தொற்று பாதித்த நபர்களுக்கு அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கொரோனாவினால் மீண்ட நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக காணப்படும் நபர்களை கருப்பு பூஞ்சை எனும் புதிய நோய் தாக்குகிறது. இந்த நோயால் பாதிக்கப்படும் நபர்கள் உடனடியாக உயிரிழக்கும் சம்பவம் நடைபெறுகிறது.
தமிழகத்தில் இதுவரை கருப்பு பூஞ்சை நோயால் 40-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் வேலூர் மாவட்டத்தில் நேற்று வரை கருப்பு பூஞ்சை நோயால் யாரும் பாதிக்கப்படவில்லை. தொற்றில் இருந்து மீண்ட நபர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.