நாசரேத் அருகே கொரோனா தடுப்பூசி முகாம்
நாசரேத் அருகே கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.
நாசரேத்:
நாசரேத் அருகே மூக்குப்பீறி ஏக ரட்சகர் சபை பள்ளி வளாகத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கி, முகாமை தொடங்கி வைத்தார். மூக்குப்பீறி சுற்று வட்டார மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
டாக்டர்கள் கல்யாணி, கபிலன், சுகாதார ஆய்வாளர் சுப்பிரமணியன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
* சேர்வைகாரன்மடம் பஞ்சாயத்தில் உள்ள செந்தியம்பலம் கிராமத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. பஞ்சாயத்து தலைவர் ஜெபக்கனி ஞானசேகர் தலைமை தாங்கினார். தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அதிகாரி சுரேஷ், கிராம நிர்வாக அதிகாரி சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் 30 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதில் கிராம சுகாதார செவிலியர் அமுதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.