காங்கேயத்தில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க குவிந்த மக்கள்

காங்கேயத்தில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க குவிந்த மக்கள்

Update: 2021-05-23 15:59 GMT
காங்கேயம்
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக இன்று முதல் ஒரு வாரத்திற்கு தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நேற்று காலை 6 மணி முதல் இரவு 9 மணிவரை அனைத்து கடைகளும் திறந்திருக்கும் என்று அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து காங்கேயம் பகுதிகளில் அதிகாலை முதலே இறைச்சி கடைகள், காய்கறி கடைகள், மளிகை கடைகள் போன்ற அத்தியாவசிய கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. 
இதனால் காங்கேயம் நகர சாலைகளான திருப்பூர் சாலை, கோவை சாலை, சென்னிமலை சாலை, பழையகோட்டை சாலை, கரூர் சாலை, தாராபுரம் சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனால் நேற்று காங்கேயம் நகர பகுதி முழுவதும் பரபரப்புடன் காணப்பட்டது.

மேலும் செய்திகள்