ரூ.12 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாராவி போலீஸ் அதிகாரிகள் 2 பேர் கைது
ரூ.12 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாராவி போலீஸ் உதவி இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்யப்பட்டனர்.
மும்பை,
மும்பை தாராவி போலீஸ் நிலையத்தில் போலீசாரை தாக்கி பணி செய்ய விடாமல் தடுத்ததாக வழக்கு பதிவு செய்து நபர் ஒருவரை கைது செய்து இருந்தனர். இந்த நிலையில் வழக்கில் இருந்து அவரை விடுக்கும்படி அந்த நபரின் உறவினர் ஒருவர் போலீஸ் உதவி இன்ஸ்பெக்டர் பிரபாகர் ஜோஷி மற்றும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமோல் காடே ஆகியோரிடம் கோரிக்கை வைத்தார்.
இதை ஏற்றுக்கொண்ட அவர்கள் வழக்கில் இருந்து அவரை விடுவிக்க தங்களுக்கு ரூ.15 ஆயிரம் லஞ்சமாக தரும்படி கேட்டனர். இதற்கு போலீசாரிடம் பேரம் பேசி ரூ.12 ஆயிரம் தருவதாக ஒப்புக்கொண்டார்.
ஆனால் லஞ்சம் கொடுக்க மனம் இல்லாத அவர் சம்பவம் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து போலீசார் கொடுத்த யோசனைப்படி ரூ.12 ஆயிரம் லஞ்ச பணத்தை தாராவி போலீஸ் நிலையத்தில் இருந்த போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அமோல் காடே மற்றும் உதவி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகர் ஜோஷியை சந்தித்து கொடுத்தார்.
இந்த பணத்தை பெற்ற 2 பேரையும் அங்கு வந்த லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.