கல்வீசி மகன் கொலை: தந்தைக்கு நிபந்தனை ஜாமீன் ஐகோர்ட்டு உத்தரவு

கல்வீசி மகன் கொலை: தந்தைக்கு நிபந்தனை ஜாமீன் ஐகோர்ட்டு உத்தரவு.

Update: 2021-05-23 05:04 GMT
திருவள்ளூர்,

திருத்தணியை அடுத்துள்ள பி.டி.புதூரைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. மதுவுக்கு அடிமையான இவரது மகன், புதிய ‘பம்ப் செட்' பொருத்துவதற்காக வாங்கிவைத்திருந்த வயர்களை திருடிச் சென்று விற்று, குடித்துள்ளார். அதனால் ஆத்திரமடைந்த தட்சிணாமூர்த்தி, தன் மகனை அடித்துள்ளார். அப்போது அவர் மீது கல்லை வீசியுள்ளார். அந்த கல் தலையில் பட்டு சம்பவ இடத்திலேயே அவரது மகன் இறந்தார். இதுகுறித்து கொலை வழக்கு பதிவு செய்த அரக்கோணம் தாலுகா போலீசார், தட்சிணாமூர்த்தியை கடந்த மார்ச் 31-ந்தேதி கைது செய்தனர்.

இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனுவை மாவட்ட கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில் அவர் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.தண்டபாணி, கொரோனா பரவல் அதிகம் உள்ள காலம் என்பதால் மனுதாரருக்கு நிபந்தனைகள் அடிப்படையில் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்