காஞ்சீபுரம் மாவட்டத்தில் சொட்டுநீர் பாசனம் அமைக்க ரூ.11¾ கோடி ஒதுக்கீடு கலெக்டர் தகவல்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் சொட்டுநீர் பாசனம் அமைக்க அரசு ரூ.11 கோடியே 72 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாக கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

Update: 2021-05-23 03:24 GMT
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காஞ்சீபுரம் மாவட்டத்தில் வசிக்கும் விவசாயிகள் சொட்டு நீர் பாசனம் அமைக்க விரும்பினால் விண்ணப்பிக்கலாம். ஏனெனில் அரசு சொட்டு நீர் பாசனம் அமைக்க ரூ.11 கோடியே 72 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறது.

இதன் மூலம் 1,525 எக்டேர் பரப்பளவில் சொட்டு நீர் பாசனம் அமைக்கலாம். சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதமும் இதர விவசாயிகளுக்கு 75 சதவீித மானியத்திலும் சொட்டு நீர் பாசனம் அமைத்து தரப்படுகிறது.

சொட்டுநீர் பாசனம் அமைக்கும் விவசாயிகள் துணைநிலை நீர்மேலாண்மை திட்டத்தின் கீழ் பலவித உபகரணங்கள் வாங்க 50 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது.

அதிக மகசூல் பெற...

ஒரு விவசாயிக்கு ஆழ்துளைகிணறு அமைக்க ரூ.25 ஆயிரம், டீசல் பம்பு செட் அல்லது மின் மோட்டார் வாங்க ரூ.15 ஆயிரம், கிணற்றிலிருந்து நீரை எடுத்து குழாய்கள் அமைத்திட ரூ.10 ஆயிரம், தரைநிலை நீர் சேகரிப்பு தொட்டி அமைக்க ரூ.40 ஆயிரம் மானியமாக வழங்கப்படுகிறது.

எனவே விவசாயிகள் இந்த திட்டத்தை பயன்படுத்தி கோடை காலத்தில் நிலவும் நீர் பற்றாக்குறையை தவிர்த்திடவும் கேட்டு கொள்ளப்படுகிறது.

மேலும் சொட்டு நீர் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகளுக்கு குழாய்கள் பதிப்பதற்கும், குழி எடுக்கவும் ஆகும் செலவில் அரசு மானியமாக ரூ.3 ஆயிரமும் வழங்கப்படுகிறது.

எனவே அனைத்து விவசாயிகளும் இந்த திட்டத்தை பயன்படுத்தி நீரை சிக்கனமாக உபயோகித்து அதிக மகசூல் பெற வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்