தமிழகத்தில் சற்று பாதிப்பு குறைந்தது: ஒரே நாளில் 35,873 பேருக்கு கொரோனா
தமிழ்நாட்டில் நேற்று பாதிப்பு சற்று குறைந்தது. அந்த வகையில் ஒரே நாளில் 35,873 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை,
தமிழகத்தில் நேற்றைய (சனிக்கிழமை) கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் நேற்று புதிதாக 1 லட்சத்து 66 ஆயிரத்து 639 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 19,895 ஆண்கள், 15,978 பெண்கள் எனமொத்தம் 35 ஆயிரத்து 873 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 12 பேரும், 12 வயதுக்கு உட்பட்ட 1,404 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 5,444 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக சென்னையில் 5,559 பேரும், கோவையில் 3,165 பேரும், செங்கல்பட்டில் 1,954 பேரும், திருவள்ளூரில் 1,511 பேரும், ஈரோட்டில் 1,758 பேரும், மதுரையில் 1,352 பேரும், திருச்சியில் 1,351 பேரும், திருப்பூரில் 1,466 பேரும், கன்னியாகுமரியில் 1,621 பேரும், காஞ்சீபுரத்தில் 1,017 பேரும், விருதுநகரில் 1,287 பேரும், குறைந்தபட்சமாக பெரம்பலூரில் 219 பேரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.
448 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் இதுவரை 2 கோடியே 55 லட்சத்து 86 ஆயிரத்து 237 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 18 லட்சத்து 6 ஆயிரத்து 861 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 10 லட்சத்து 74 ஆயிரத்து 61 ஆண்களும், 7 லட்சத்து 32 ஆயிரத்து 762 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 38 பேரும் அடங்குவர்.
அதில் 12 வயதுக்கு உட்பட்ட 64 ஆயிரத்து 881 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 2 லட்சத்து 53 ஆயிரத்து 873 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர். கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 279 பேரும், தனியார் மருத்துவமனையில் 169 பேரும் என 448 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் 86 பலி
அந்த வகையில், சென்னையில் 86 பேரும், செங்கல்பட்டில் 38 பேரும், கோவையில் 32 பேரும், மதுரையில் 28 பேரும், ராமநாதபுரத்தில் 25 பேரும், திருப்பூரில் 23 பேரும், திருவள்ளூர், கன்னியாகுமரியில் தலா 20 பேரும், சேலத்தில் 18 பேரும், திருச்சியில் 16 பேரும், வேலூர், திருப்பத்தூர், காஞ்சீபுரத்தில் தலா 15 பேரும், தூத்துக்குடியில் 11 பேரும், ஈரோட்டில் 10 பேரும், தென்காசியில் 9 பேரும் பலியாகி உள்ளனர்.
அதேபோல், விருதுநகரில் 8 பேரும், ராணிப்பேட்டையில் 7 பேரும், கடலூரில் 6 பேரும், நெல்லை, தஞ்சாவூர், நாமக்கலில் தலா 5 பேரும், பெரம்பலூரில் 4 பேரும், விழுப்புரம், திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திண்டுக்கலில் தலா 3 பேரும், அரியலூர், தருமபுரி, கரூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலையில் தலா 2 பேரும், தேனி, கள்ளக்குறிச்சியில் தலா ஒருவரும் என 35 மாவட்டங்களில் 448 உயிரிழப்பு நிகழ்ந்தது உள்ளது. இதில் இணை நோய் அல்லாத 125 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை 20 ஆயிரத்து 46 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
25,776 பேர் ‘டிஸ்சார்ஜ்’
கொரோனா பாதிப்பில் இருந்து 25,776 பேர் நேற்று ‘டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 4,871 பேரும், கோவையில் 2,377 பேரும், செங்கல்பட்டில் 2,155 பேரும் அடங்குவர்.
இதுவரையில் 15 லட்சத்து 2 ஆயிரத்து 537 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 2 லட்சத்து 84 ஆயிரத்து 278 பேர் உள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.