கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலி - ஒரே நாளில் 781 பேர் பாதிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலியான நிலையில் நேற்று ஒரே நாளில் 781 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்தவர் 62 வயது முதியவர். இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த 17-ந் தேதி கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார்.
கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த 67 வயது மூதாட்டி. கொரோனா பாதிப்புடன் கடந்த 18-ந் தேதி கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் 20-ந் தேதி இறந்தார். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் எண்ணிக்கை 175 ஆக உயர்ந்துள்ளது. தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 781 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 109 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 27 ஆயிரத்து 236 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 18 ஆயிரத்து 947 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 8 ஆயிரத்து 114 பேர் சிகிச்சையில் உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் எண்ணிக்கை 175 ஆக உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.