மணல் கடத்திய 3 பேர் மீது வழக்கு; மாட்டு வண்டிகள் பறிமுதல்

மணல் கடத்திய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2021-05-22 19:53 GMT
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள தென்கச்சிபெருமாள்நத்தம் கிராம நிர்வாக அதிகாரி அசோக்குமார், தனது உதவியாளருடன் தென்கச்சிபெருமாள்நத்தம் கொள்ளிடக்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது கொள்ளிட கரையோரம் மணல் ஏற்றி வந்த 3 மாட்டு வண்டிகளை மறித்து, அதில் வந்தவர்களிடம் விசாரணை செய்ய முயன்றார். இதனால் மாட்டு வண்டிகளை ஓட்டி வந்த 3 பேர், வண்டிகளை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து அவர் தா.பழூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து போலீசார், மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். இதில் மாட்டு வண்டிகளில் கோடங்குடி தெற்கு தெருவை சேர்ந்த சாமிக்கண்ணுவின் மகன் கணேசன், பொற்பதிந்தநல்லூர் மேலத்தெருவை சேர்ந்த பெருமாள் மகன் தேவேந்திரன், கோவிந்தராஜ் மகன் ஜெய்சங்கர் ஆகியோர் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்