முக கவசம் அணியாதவர்களுக்கு ெகாரோனா பரிசோதனை
ஸ்ரீவில்லிபுத்தூரில் முக கவசம் அணியாதவர்களுக்கு ெகாரோனா பரிசோதனை செய்து துணை போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை மேற்கொண்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூரில் முக கவசம் அணியாதவர்களுக்கு ெகாரோனா பரிசோதனை செய்து துணை போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை மேற்கொண்டார்.
தற்காலிக சந்தை
ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்கள் ஊரடங்கு விதிகளை மீறி தேவையின்றி சாலைகளில் சுற்றி திரிகின்றனர். இதனால் நாளுக்கு நாள் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இதனை தடுக்க காவல்துறை மற்றும் சுகாதாரத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் தனியார் பள்ளி மைதானத்தில் இயங்கிவரும் தற்காலிக காய்கறி சந்தையில் நேற்று காலை துணை போலீஸ் சூப்பிரண்டு நமச்சிவாயம் தலைமையில் போலீசார் மற்றும் நகராட்சி சுகாதாரத் துறையினர் முகாமிட்டு சந்தைக்கு முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதித்தனர். அத்துடன் முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு சுகாதாரத்துறை மூலம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கொரோனா பரிசோதனை
இதுகுறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு நமச்சிவாயம் கூறியதாவது:-
ஸ்ரீவில்லிபுத்தூரில் தனியார் பள்ளி மைதானத்தில் செயல்படும் 46 காய்கறி கடைக்காரர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
அதேபோல முக கவசம் இல்லாமல் தேவையின்றி சுற்றி திரிந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ேதவையின்றி சாலைகளில் சுற்றி திரிபவர்களுக்கு அபராதம் விதிப்பதுடன், கொரோனா பரிசோதனையும் இனி செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.