சிறுகனூரில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது

சிறுகனூரில் கஞ்சா விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-05-22 18:43 GMT
சமயபுரம், 
சிறுகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையிலான போலீசார் ரோந்துப்பணியில் இருந்த போது, சிறுகனூரில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், சிறுகனூர் மேலதெருவை சேர்ந்த கோகுல்ராஜ் (வயது 22), முஸ்லிம்தெருவைசேர்ந்த மன்சூர்அலி (23) ஆகியோர் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 20 கிராம் கஞ்சா, ரூ.300 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்