சிங்கம்புணரி ஒன்றிய, நகர தி.மு.க. சார்பில் பேரூராட்சி வளாகத்தில் தூய்மை பணியாளர்களுக்கு முககவசம் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு தி.மு.க. ஒன்றிய செயலாளர் பூமிநாதன், நகர செயலாளர் யாகூப் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். பேரூராட்சி செயல் அலுவலர் ஜான்முகமது அனைவரையும் வரவேற்றார். பின்னர் 80-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு முககவசம், கையுறை, கிருமிநாசினி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்க கூடிய நாட்டுக்கோழி சூப் வழங்கப்பட்டது. சிங்கம்புணரி அண்ணா சிலை முன்பு 1000 பேருக்கு கபசுரக்குடிநீர் மற்றும் தூதுவளை சூப் வழங்கப்பட்டது.இதில் துணை போலீஸ் சூப்பிரண்டு பொன் ரகு கலந்துகொண்டு தூய்மை பணியாளர்களுக்கு நாட்டுக்கோழி சூப் வழங்கினார்.