கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரம்

கோட்ைடயூர் பேரூராட்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

Update: 2021-05-22 18:15 GMT
காரைக்குடி,

காரைக்குடி அருகே உள்ள கோட்டையூர் பேரூராட்சி பகுதிகளில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. முககவசம் அணியாமல் பொது இடங்களில் செல்லும் பொதுமக்கள் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் பொருட்களை விற்பனை செய்யும் கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு, மருத்துவ அலுவலர்கள் ஆலோசனைப்படி தனிமைப்படுத்தப்பட்டு உள்ள நபர்களின் வீடுகளில் சிவகங்கை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் சாமி சுந்தராஜ் தலைமையில் பேரூராட்சி செயல் அலுவலர் கவிதா மற்றும் சுகாதார அலுவலர்கள் நேரில் சென்று மருத்துவ உதவிகள் மற்றும் இதர அத்தியாவசிய தேவைகள் கிடைக்கிறதா? உடல் நலம் குறித்தும் கேட்டறிந்தனர்.

மேலும் செய்திகள்