இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
கரூர் அருகே குடும்ப பிரச்சினையில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கரூர்
இளம்பெண் தற்கொலை
கரூர் அருகே உள்ள புலியூர் கவுண்டம்பாளையம் டீச்சர்ஸ் காலனியை சேர்ந்தவர் விக்கிரமன். இவரது மனைவி பிரியங்கா (வயது 23). இந்த தம்பதிக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. தற்போது 9 மாத ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்தநிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இதனால் மனமுடைந்து காணப்பட்ட பிரியங்கா நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்த பசுபதிபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் பிரியாங்காவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.