அரக்கோணத்தில் வீடு,வீடாக சென்று கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய கலெக்டர்
அரக்கோணத்தில் வீடு, வீடாக சென்று கொரோனா குறித்து கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
அரக்கோணம்
கலெக்டர் ஆய்வு
அரக்கோணம் அரசு மருத்துவமனையில் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் கொரோனா வார்டு பகுதி, ஆக்சிஜன் பகுதி ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மருத்துவ அலுவலர் நிவேதிதாவிடம் ஆக்சிஜன் மற்றும் மருந்து இருப்புகளை கேட்டறிந்தார்.
தொடர்ந்து அரக்கோணம் நகராட்சி சுவால்பேட்டையில் நகராட்சி பணியாளர்கள் வீடு, வீடாக சென்று முககவசம், தடுப்பூசி, கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி கொண்டிருந்தனர். அவர்களுடன் சேர்ந்து கலெக்டர் வீடு, வீடாகச் சென்று அப்பகுதி மக்களிடம் கொரோனா குறித்தும், தடுப்பூசி குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
கொரோனா சிகிச்சை மையம்
பின்னர் அரக்கோணத்தில் கொரோனா சிகிச்சை மையம் அமைந்துள்ள கல்லூரி உள்ளிட்ட இடங்களை ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அரக்கோணம் உதவி கலெக்டர் சிவதாஸ், தாசில்தார் பழனி ராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜோசப் கென்னடி, நகராட்சி ஆணையர் ஆசிர்வாதம் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.