அவினாசி அரசு மருத்துவமனையில் படுக்கையுடன் கூடிய ஆக்சிஜன் பஸ் வசதி

அவினாசி அரசு மருத்துவமனையில் படுக்கையுடன் கூடிய ஆக்சிஜன் பஸ் வசதி

Update: 2021-05-22 14:35 GMT
அவினாசி
அவினாசி வட்டாரத்தில் கொரோனா  நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் அவினாசி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய போதிய படுக்கை வசதி இல்லாததால் நோய்வாய்ப்பட்டவர்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.எனவே அவினாசி அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் பஸ் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. 
இதனைத் தொடர்ந்து அவினாசி அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் பஸ் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. ஆக்சிஜன் தேவை என வரும் நபர்களுக்கு படுக்கை வசதி கிடைக்கும்வரை இந்த பஸ்சில் ஒரே நேரத்தில் 10 பேருக்கு ஆக்சிஜன் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிலிண்டர் முறை தவிர்த்து காற்றிலிருந்து சுத்தமான ஆக்சிஜனை பிரித்து பயன்பாட்டிற்கு கொண்டு  வருவதால் 24 மணி நேரமும் இதை பயன்படுத்த முடியும். ஆக்சிஜன் பஸ் அவினாசி அரசு மருத்துவமனையில் உள்ளதால் படுக்கை வசதி இல்லாதவர்களுக்கு நல்ல பயனுள்ளதாக அமைந்துள்ளது.
இதுபோல் சேவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 30 ஆக்சிஜன் படுக்கை வசதி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்